/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எந்த பஞ்சாயத்துக்கு; எங்கு ஓட்டு எண்ணிக்கை?
/
எந்த பஞ்சாயத்துக்கு; எங்கு ஓட்டு எண்ணிக்கை?
ADDED : செப் 30, 2011 01:48 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 32 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. எந்தெந்த பஞ்சாயத்துக்கு; எங்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது? என்ற விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாநகராட்சி மேயர் முதல் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வரை, மாவட்டத்தில் 3,363 பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், அக்டோபர் 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. கிராமப் பகுதியில் 1,503 ஓட்டுச்சாவடியில் ஓட்டுச்சீட்டு மூலமும், நகர்ப்புற பகுதியில் 1,100 ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலமும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாவட்டத்தில் 6,298 ஓட்டுப்பெட்டிகள், 2,600 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், மாவட்டத்தில் உள்ள 32 ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, ஓட்டுப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு, அவை பாதுகாப்பாக வைக்கப்படும். அக்டோபர் 21ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.ஈரோடு மாநகராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி.,யிலும், நகராட்சிகளான பவானிக்கு; பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சத்திக்கு; சத்தி ஜான் டி பிரிட்டோ மகளிர் பள்ளி, கோபிக்கு வைரவிழா பள்ளி, புஞ்சை புளியம்பட்டிக்கு; நகராட்சி கூட்ட அரங்கில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் உட்பட்ட யூனியன் கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கான ஓட்டுகள் அந்தந்த யூனியனில் எண்ணப்படுகிறது. இதன்படி, ஈரோடு யூனியனுக்கு; சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கணிதப்பிரிவு கட்டிடத்தில் ஓட்டு எண்ணப்படும்.
அம்மாபேட்டை யூனியனுக்கு சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, அந்தியூருக்கு அந்தியூர் அரசு ஆண்கள் பள்ளி, பவானிக்கு பவானி அரசு ஆண்கள் பள்ளி, பவானிசாகருக்கு அங்குள்ள அரசு பள்ளி, சென்னிமலைக்கு கொமரப்பா செங்குந்தர் பள்ளி, கோபிக்கு சி.கே.கே. பள்ளி, கொடுமுடிக்கு எஸ்.எஸ்.வி. பள்ளி, மொடக்குறிச்சிக்கு அங்குள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஓட்டு எண்ணப்படும்.நம்பியூர் யூனியனுக்கு; நம்பியூர் ஆண்கள் பள்ளி, பெருந்துறைக்கு அங்குள்ள அரசு பெண்கள் பள்ளி, சத்திக்கு அங்குள்ள அரசு பெண்கள் பள்ளி, டி.என்.பாளையத்துக்கு பங்களாப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாளவாடிக்கு தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓட்டு எண்ணப்படும்.டவுன் பஞ்சாயத்துகள்: அந்தியூர், அம்மாபேட்டை, அத்தாணி, நெரிஞ்சிப்பேட்டை, ஒலகடம் ஆகிய டவுன் பஞ்சாயத்துகளுக்கான ஓட்டுகள்; அந்தியூர் அரசு பெண்கள் பள்ளியில் எண்ணப்படும்.நம்பியூர், எலத்தூருக்கு; நம்பியூர் அரசு பெண்கள் பள்ளி, சித்தோடு, நசியனூர், பள்ளபாளையத்துக்கு; சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரி, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டிக்கு; பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி, ஆப்பக்கூடல், ஜம்பை, பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையத்துக்கு; கவுந்தபாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவல்பூந்துறைக்கு கரூர் ரோடு கார்மல் மெட்ரிகுலேஷன் பள்ளி, சிவகிரி, கொல்லங்கோவில், மொடக்குறிச்சி, வடுகப்பட்டி, அறச்சலூருக்கு; சிவகிரி எஸ்.எஸ்.வி. பள்ளியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.கொடுமுடி, வெங்கம்பூர், சென்னசமுத்திரம், வெள்ளோட்டம்பரப்பு, பாசூர், கிளாம்பாடி, ஊஞ்சலூருக்கு; கொடுமுடி எஸ்.எஸ்.வி. மகளிர் பள்ளி, சென்னிமலைக்கு கொமரப்பா செங்குந்தர் மகளிர் பள்ளி, லக்கம்பட்டி, கொளப்பலூர், கூகலூர், காசிபாளையத்துக்கு; கோபி கலைக்கல்லூரி, பெரியகொடிவேரி, வாணிப்புத்தூர், அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கம்பாளையத்துக்கு; பெரியகொடிவேரி செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளி, பவானிசாகருக்கு ஹோலி ரெடிமேரீஸ் பள்ளியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இவ்விடங்களில் மூன்றடுக்காக பாதுகாப்பு தடுப்பு கம்பு அமைக்கப்படுகிறது. ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பு அறையில் இருந்து, எண்ணும் இடத்துக்கு எடுத்துச் செல்லும் வழி ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடக்கிறது.