/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இயற்கை இடர்பாடு புகார்ஃபோன் எண் அறிமுகம்
/
இயற்கை இடர்பாடு புகார்ஃபோன் எண் அறிமுகம்
ADDED : செப் 30, 2011 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு பகுதியில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை, இடி, மின்னல்,
வெள்ளம், காற்றால் ஏற்படும் இன்னல்கள், பாதிப்புகள் குறித்து தெரிவிக்க,
கலெக்டர் அலுவலகத்தில், '1077' என்ற ஃபோன் எண் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.இந்த எண்ணுக்கு மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தும்
இலவசமாக தகவல்களை தெரிவிக்கலாம்.
பொதுமக்களிடம் இருந்து வரும் தகவல்களை, 24
மணி நேரமும் இந்த எண்ணில் பெற உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர,
0424 2260 210 என்ற எண்ணிலும் இயற்கை இடர்பாடு இழப்புகளை தெரிவிக்கலாம்.
இத்தகவலை கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.