ADDED : செப் 30, 2011 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி தலைவர் பதவிக்கு 11 பேரும், 18 வார்டு
கவுன்சிலர் பதவிக்கு 140 பேரும் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
காங்கேயம்
நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில்
வெங்குமணிமாறன், தி.மு.க., சார்பில் சுப்பிரமணி, காங்கிரஸ் சார்பில்
அண்ணாத்துரை, தே.மு.தி.க., சார்பில் ரமேஷ், பா.ஜ., சார்பில் சங்கரகோபால்
உட்பட 11 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நகராட்சியில் உள்ள 18 வார்டு
கவுன்சிலர் பதவிக்கு, மொத்தம் 140 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.