/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் சைலன்ட் பிரச்சாரம்
/
ஈரோடு மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் சைலன்ட் பிரச்சாரம்
ஈரோடு மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் சைலன்ட் பிரச்சாரம்
ஈரோடு மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் சைலன்ட் பிரச்சாரம்
ADDED : அக் 05, 2011 02:52 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பெரும்பாலான வேட்பாளர்கள் கூட்டமின்றி
சைலன்டாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஈரோடு மாநகராட்சி தேர்தலில் மேயர்
பதவிக்கு 18 வேட்பாளர்களும், 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 488
வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அக்டோபர் 17ம் தேதி தேர்தல்
ஓட்டுப்பதிவு நடப்பதால், பிரச்சாரம் செய்வதற்கான காலஅவகாசம் குறைவாக
உள்ளது.
இதனால், வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை
தீவிரப்படுத்தியுள்ளனர்.மேயர் வேட்பாளர்களில் அ.தி.மு.க., - தி.மு.க., -
தே.மு.தி.க., வேட்பாளர்களைத் தவிர, பிற வேட்பாளர்களுடன் பிரச்சாரத்துக்கு
வருபவர்கள் மிக குறைந்த அளவே உள்ளனர்.அதேபோல், பல வார்டுகளில் கவுன்சிலர்
வேட்பாளர்களில் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளைத் தவிர பிற கட்சி மற்றும்
சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு, மூன்று பேருடன் சென்று பிரச்சாரம் செய்வதே
பெரிய விஷயமாக உள்ளது.பெரும்பாலும் வேட்பாளர்கள் கூட்டமின்றி சைலன்டாக
பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். கூட்டத்தை கூட்டினால், அவர்களுக்கு தனியே
செலவு செய்ய வேண்டுமென்ற பயத்தினால், பெரிய கட்சி வேட்பாளர்கள் கூட அதை
தவிர்க்கின்றனர்.வெற்றிவாய்ப்புமின்றி, பணத்தையும் இழக்க வேட்பாளர்கள்
தயாராக இல்லாததே இதற்கு காரணம். தேர்தல் தேதி நெருங்க, நெருங்க, மேலும்
மாற்றங்களும், வினோதங்களும் அரங்கேற வாய்ப்புள்ளது.

