sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அ.தி.மு.க., மேயர் வேட்பாளர்மல்லிகா பரமசிவம் தீவிர பிரச்சாரம்

/

அ.தி.மு.க., மேயர் வேட்பாளர்மல்லிகா பரமசிவம் தீவிர பிரச்சாரம்

அ.தி.மு.க., மேயர் வேட்பாளர்மல்லிகா பரமசிவம் தீவிர பிரச்சாரம்

அ.தி.மு.க., மேயர் வேட்பாளர்மல்லிகா பரமசிவம் தீவிர பிரச்சாரம்


ADDED : அக் 07, 2011 01:05 AM

Google News

ADDED : அக் 07, 2011 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் மல்லிகா பரமசிவம் ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் வரவேற்பளித்து, ஆதரவு தெரிவிக்கின்றனர்.அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் மல்லிகா பரமசிவம் கடந்த 2, 3ம் தேதிகளில் பெரியசேமூர் நகரம், 4,5ம் தேதியில் ஈரோடு நகரப் பகுதியின் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று சூரம்பட்டி நகரப் பகுதியில் மகாளி அம்மன் கோவில், ஜெகநாதபுரம் காலனி, காமராஜ் வீதி 1,2,3,4, பெரியார் சாலை, மோகன் குமாரமங்கலம் வீதி, டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி இரண்டாம் எண் பஸ் ஸ்டாப், நேதாஜி வீதி, நேதாஜி நகர், ராஜாஜி வீதி, காந்திஜி வீதி, திருவள்ளுவர் வீதி, பாண்டியன் வீதி, சங்குநகர், பழையபாளையம், சுத்தானந்தன் காலனி, அணைக்கட்டு ரோடு, சூரம்பட்டி வலசு, சத்தியமூர்த்தி வீதி, பட்டேல் வீதி, திரு.வி.க.வீதி உள்ளிட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.பொதுப்பணித் துறை அமைச்சரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான ராமலிங்கம் பல்வேறு இடங்களில் மல்லிகா பரமசிவத்துக்கு, இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு திரட்டினார்.

வேட்பாளர், அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களிலெல்லாம், பொதுமக்கள் வரவேற்பளித்து, தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.நகரச் செயலாளர்கள் ஈரோடு மனோகரன், பெரியசேமூர் சக்தி சிவசுப்பிரமணியன், சூரம்பட்டி ஜெகதீசன் மற்றும் கட்சி நிர்வாகிகளும், வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர்.பிரச்சாரத்தின் போது, ''நான் வெற்றிபெற்றால், முதல்வர் ஜெயலலிதாவின், இல்லத்தரசிகளுக்கு இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டம், மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப், திருமணம், முதியோர் உதவித்தொகைகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களும், அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக கிடைக்கச் செய்வேன். மாநகரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன்,'' என வாக்குறுதி அளித்தார்.இன்று காசிபாளையம் நகர்ப் பகுதியில் மல்லிகா பரமசிவம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.






      Dinamalar
      Follow us