sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருடர்கள் குறித்து வங்கியில் எச்சரிக்கை நோட்டீஸ்

/

திருடர்கள் குறித்து வங்கியில் எச்சரிக்கை நோட்டீஸ்

திருடர்கள் குறித்து வங்கியில் எச்சரிக்கை நோட்டீஸ்

திருடர்கள் குறித்து வங்கியில் எச்சரிக்கை நோட்டீஸ்


ADDED : அக் 11, 2011 02:35 AM

Google News

ADDED : அக் 11, 2011 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் நூதன முறையில் பணம், நகை பறிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது குறித்து, வங்கிகளில் போலீஸார் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.ஈரோடு மாநகரில் சமீப காலமாக வங்கிகளிலிருந்து பணம், நகைகளை எடுத்து வருவோர் மற்றும் செலுத்த வருவோரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகமாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டூ வீலர், காரில் வங்கிக்கு வந்தவர்களிடம் பட்டப்பகலில் கொள்ளையடித்த சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. இவற்றில் போலீஸார் வழக்குப்பதிந்து முறையாக விசாரித்தது சிலவற்றைதான். மற்றவை போலீஸ் புகாருக்கு செல்லாமலும், புகார் தெரிவித்து வழக்கு பதியாமலும் மறைக்கப்பட்டு உள்ளன.வாகனங்களில் வருவோரை நோட்டமிட்டு, வண்டியில் தீப்பற்றுவதாகவும், ஆயில் லீக் ஆவதாகவும் ஏமாற்றி பணம், நகைகளை நூதன முறையில் கொள்ளையடிக்கின்றனர். இதைத்தடுக்க டவுன் போலீஸார் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் வகையில், அனைத்து வங்கிகளுக்கும், எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இவை வங்கிகளில் ஒட்டப்பட்டுள்ளன.அதில் கூறியிருப்பதாவது:நீங்கள் வங்கியில் இருந்து பணம், நகை எடுத்துச் செல்லும் போது, உங்கள் வண்டி தீப்பிடித்து விட்டதாகவும், உங்கள் உறவினர் விபத்தில் சிக்கி விட்டதாவும், வீடு, அலுவலகம், கடைகளில் காஸ் லீக் ஆகிறது; தீப்பிடித்து விட்டது எனவும் தெரிவித்து, பணத்தை திருட முயற்சிப்பர்.வண்டி மீது ஆயில் ஊற்றியும், வேண்டுமென்றே உரசியும், ரூபாய் நோட்டுகளை ரோட்டில் சிதற விட்டும், ஆடைகளின் மீது ஆயில், கிரீஸ், எச்சம் போன்றவற்றை தடவியும், திசை திருப்பி கொள்ளையடிக்க முயற்சிப்பர்.எனவே, பணம் எடுத்துச் செல்லும் வழியில் இதற்கு இடமளிக்காமல், குறைந்தது இருவர் சென்று, விழிப்புணர்வுடன் இருந்து, ஏமாறாமல், பணம், நகையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.விபரங்களுக்கு டவுன் போலீஸ் ஸ்டேஷன்: 0424 221 7100, சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் 94454 92526, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் 94454 92527, காவல் கட்டுப்பாட்டு அறை 225 9100 அல்லது 100 என்ற ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us