/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் வேலியில் சிக்கிவளர்ப்பு நாய் பலி
/
மின் வேலியில் சிக்கிவளர்ப்பு நாய் பலி
ADDED : அக் 12, 2011 01:41 AM
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, விவசாயி வளர்த்த நாய், மின் வேலியில்
சிக்கி இறந்தது.தம்மம்பட்டி அருகே உள்ள கோனேரிப்பட்டி பெருமாள் கரடு
காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பார்த்தசாரதி.
அவரது
தோட்டத்து வீட்டில் பாதுகாப்புக்காக நாய் வளர்த்து வந்தார். நேற்று காலை
7.20 மணியளவில், மரவள்ளி தோட்டத்தில், காட்டு பன்றிகளுக்காக போடப்பட்ட மின்
வேலியில் சிக்கி வளர்ப்பு நாய் பரிதாபமாக உயிரிழந்தது.தகவலறிந்து சென்ற
தம்மம்பட்டி மின்வாரிய அலுவலர்கள், காலை 8.30 மணியளவில் விவசாய தோட்டத்தில்
அமைத்திருந்த மின் வேலியை ஆய்வு செய்து, மின்சாரத்தை துண்டித்தனர்.
புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீஸார், மின் வேலியில் சிக்கி நாய்
உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

