/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொய்த்தாய் விளையாட்டில் ஈரோடு வீரர்கள் சாதனை
/
மொய்த்தாய் விளையாட்டில் ஈரோடு வீரர்கள் சாதனை
ADDED : ஜூலை 16, 2025 01:25 AM
ஈரோடு, தேசிய அளவிலான மொய்த்தாய் விளையாட்டில், தமிழக அணி தங்கம், வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தது
தாய்லாந்து குத்து சண்டை போன்று மொய்த்தாய் என்ற விளையாட்டு, மாநில அளவில் சென்னையிலும், தேசிய அளவில் சண்டிகார், ஜெய்பூரில் நடந்தது. மாநில அளவில் சென்னையில் நடந்த போட்டியில் ஈரோட்டில் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் வீரர்கள் வேதா-தங்கம், மகஸ்ரீ -தங்கம், சச்சின்- வெள்ளி, வைபவ் -வெள்ளி, பிரணவ் -வெள்ளி, நளன் ராஜ் -தங்கம், நிக்லியன் ராஜ்- தங்க பதக்கங்களை வென்றனர்.
தேசிய அளவில் சண்டிகரில் நடந்த போட்டியில் வேதா- தங்கம், சாய் நிகிலேஷ் -தங்கம், பிரணவ்- வெண்கலம், நளன்ராஜ்- தங்கம், நிக்லியன் ராஜ் -தங்க பதக்கம் பெற்றனர். ஹரியானாவில் நடந்த மற்றொரு போட்டியில் மகஸ்ரீ- தங்கம், சச்சின்- தங்கம், சாய் நிகிலேஷ் -வெள்ளி, நிக்லியன் ராஜ் -தங்கம், நளன்ராஜ் -வெள்ளி பதக்கங்களை வென்றனர். இவர்கள் அனைவரும் அமைச்சர் முத்துசாமியை, ஈரோட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.