ADDED : அக் 19, 2026 06:31 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில், அரசு, அரசு நிதியுதவி பள்ளி
மாணவ, மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டி இளையோர் திறன் என்ற மைய
கருத்தின் அடிப்படையில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, பள்ளி, வட்டாரம்,
மாவட்ட அளவில் போட்டி நடந்தது. சில தினங்களுக்கு முன் மாநில அளவில் கலை
திருவிழா போட்டி நடந்தது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 114
அரசு பள்ளி மாணவர்கள், 100 அரசு நிதியுதவி பள்ளி மாணவர் என, 214 பேர்
பங்கேற்றனர். இதில், 13 அரசு பள்ளி மாணவர்கள், ஆறு அரசு உதவி பெறும்
பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மொடக்குறிச்சி
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஜெனிஷா நாட்டு
புற பாடல்-தனி பிரிவு, லக்காபுரம் அரசு மேல்நிலை பள்ளி ஒன்பதாம்
வகுப்பு அபிராமி-ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், கவுந்தப்பாடி
அரசு மாதிரி மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு ஸ்ரீ ரித்விக்ராஜ்-பிற வகை
நடனம் (தனி), குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 2 யோகித்
ரிஷி-செவ்வியல் இசை (தனி) மற்றும் வீணை-விசித்திர வீணை -கோட்டு
வாத்தியம், ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 2
அம்ரீஷ் வயலின் இசையில் மாநில அளவில் முதலிடம் பெற்றனர்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 27, 28ல் கோவை, மதுரையில் மாநில கலை திருவிழா போட்டி நடக்கிறது.
