தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மினி தீயணைப்பு வாகனம் வருகை

மினி தீயணைப்பு வாகனம் வருகை

மினி தீயணைப்பு வாகனம் வருகை


ADDED : அக் 19, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி:கோபி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்காக, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதி நவீன தீயணைப்பு வாகனம், கடந்த மார்ச் முதல் பயன்பாட்டில் உள்ளது. சென்சார் வசதியுடன் இயங்கும் இந்த வாகனத்தில், 5,500 லிட்டர் கொள்ளளவில் நீரை சேமிக்க முடியும்.

இந்நிலையில் வளர்ந்து வரும் கோபி டவுன் பகுதியில், வாகன போக்குவரத்துக்கு இடையூறான பகுதியில், தீ விபத்து நடக்கும் பகுதிக்கு இந்த வாகனத்துடன் விரைவது வீரர்களுக்கு சிரமமாக இருந்தது. இதை போக்கும் வகையிலும், துரிதமாக விரைந்து பணி மேற்கொள்ள, மினி தீயணைப்பு வேன், கோபி தீயணைப்பு நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்துள்ளது. இந்த வாகனத்தில் தீயணைக்க வசதியாக, 1,000 லிட்டர் தண்ணீர் மற்றும் 300 லிட்டர் சோப்பு நுரை சேமிக்கும் வசதி உள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us