/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு வாகனத்துக்கு திருவாடனையில் அபராதம்
/
ஈரோடு வாகனத்துக்கு திருவாடனையில் அபராதம்
ADDED : ஜூன் 18, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கொல்லம்பாளையம், ஏ.கே.எம்.நகரை சேர்ந்த போட்டோகிராபர் ஞான பிரகாஷ். ஈரோடு எஸ்.பி.,சுஜாதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 17 ஆண்டாக சி.டி.100 பைக் ஓட்டி வருகிறேன். கடந்த, 15ல் போக்குவரத்து விதிமீறல் என என் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தது.
அதில் சிவகங்கை மாவட்டம் திருவாடனையில் பயணித்தபோது விதிமீறல் தொடர்பாக அபராதம் விதித்தது தெரியவந்தது. எனது வண்டி எண்ணை போலியாக கொண்டு பைக் ஓட்டுவதாக தெரிகிறது. அந்த பைக்கை பறிமுதல் செய்ய வேண்டும். தவறுதலாக எனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.