/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு இன்று துவக்கம்
/
இ.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு இன்று துவக்கம்
ADDED : ஆக 18, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழக அரசு தேர்வுத்துறை, 12.5 வயது பூர்த்தியானவர்கள் தனித்தேர்வராக இ.எஸ்.எஸ்.எல்.சி.,(8ம் வகுப்பு) தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 168 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு இன்று தேர்வு தொடங்குகிறது. இன்று தமிழ் தேர்வு நடக்கிறது. இதையடுத்து ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, 22ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் ஈரோடு சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலை பள்ளி மட்டும் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.