/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'அறிவு துறையில் சிறந்து விளங்கினால் முதல் வரிசையில் உங்களை நிறுத்தும்'
/
'அறிவு துறையில் சிறந்து விளங்கினால் முதல் வரிசையில் உங்களை நிறுத்தும்'
'அறிவு துறையில் சிறந்து விளங்கினால் முதல் வரிசையில் உங்களை நிறுத்தும்'
'அறிவு துறையில் சிறந்து விளங்கினால் முதல் வரிசையில் உங்களை நிறுத்தும்'
ADDED : ஆக 08, 2025 01:08 AM
ஈரோடு, ஈரோட்டில், அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும் ஈரோடு புத்தகத்திருவிழா மாலை நேர அரங்குக்கு எஸ் அன்ட் எஸ்., இன்பிராகான் நிறுவன மேலாண்மை இயக்குனர் சண்முகன் தலைமை வகித்தார். பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.
சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படை ஐ.ஜி., மயில்வாகனன் பேசுகையில்,'' நாம் கற்பதால் முழுமை பெறுகிறோம். திருக்குறளில் நாம் எதை கற்க வேண்டும், எப்படி கற்க வேண்டும், அதனால் ஏற்படும் பலன்கள் என அனைத்தையும் விளக்கி கூறி உள்ளது. நம்மை வளர்த்து கொள்ள, நாம் தினமும் படிக்க வேண்டும். குறைந்தபட்சம், 30 நிமிடமாவது படிக்க வேண்டும். நேரம் ஒதுக்கி படித்து, நம் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
'புதுக்கருத்தும் பொதுக்கருத்தும்' என்ற தலைப்பில், தமிழ் இணைய கல்வி கழக நெறியாளர் செந்தலை கவுதமன் பேசுகையில்,'' புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால், உணர்ச்சி சார்ந்த நோய்கள் வராது. புத்தகம் படிக்கும்போது சுயநலம், தன்நலம் வேண்டும். குழந்தைகளிடம் அதிக புத்தகங்களை படிக்க சொல்லுங்கள். படிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். அதற்கு பெற்றோர்கள் முதலில் அதிகம் படிப்பவர்களாக இருக்க வேண்டும். படிப்பதும், எழுதுவதும் முக்கியம் என்பதை உணர வேண்டும். அறிவு துறையில் சிறந்தால் முதல் வரிசையில் உங்களை நிறுத்தும்,'' என்றார்.
'தமிழருக்கில்லை தமிழ்' என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி பேசினார்.