/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு கைது செய்து கோர்ட் உத்தரவு நிறைவேற்றம்
/
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு கைது செய்து கோர்ட் உத்தரவு நிறைவேற்றம்
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு கைது செய்து கோர்ட் உத்தரவு நிறைவேற்றம்
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு கைது செய்து கோர்ட் உத்தரவு நிறைவேற்றம்
ADDED : நவ 09, 2024 01:40 AM
அந்தியூர், நவ. 9-
அந்தியூர் அருகே ஓசைபட்டியை சேர்ந்தவர் அர்ஜுனன், 56; வேம்பத்தி, கூலிவலசில் இவருக்கு சொந்தமான, 7- ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்துக்கு செல்வதற்கு, 20 அடி அகலத்துடன், 500 மீட்டர் தொலைவுக்கு வண்டி பொதுப்பாதை உள்ளது. இதை அப்பகுதி கிராம மக்கள் சிலர் ஆக்கிரமித்து, அர்ஜுனனை பயன்படுத்த விடாமல் தடுத்து வந்தனர். இதுகுறித்து மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், 19 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்பில், பொது வண்டிப்பாதையை அர்ஜூனனுக்கு மீட்டு தர வருவாய் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வருவாய் துறையினர் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் அர்ஜூனன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டார். இதில் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை மீட்டு தர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அந்தியூர் தாசில்தார் கவியரசு தலைமையிலான வருவாய் துறையினர், பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையான போலீசார், அதிவிரைவு படையினர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்றனர்.
இதையடுத்து திரண்ட கூலிவலசை சேர்ந்த கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பை அகற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தும், வாக்குவாதம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனத்தில் ஏற்றி, ஆப்பக்கூடல் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பிறகு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட மக்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.