/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பழங்குடி மக்கள் குழந்தைகளின் கல்வி பாதிப்பு உரிய நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
/
பழங்குடி மக்கள் குழந்தைகளின் கல்வி பாதிப்பு உரிய நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
பழங்குடி மக்கள் குழந்தைகளின் கல்வி பாதிப்பு உரிய நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
பழங்குடி மக்கள் குழந்தைகளின் கல்வி பாதிப்பு உரிய நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
ADDED : நவ 05, 2025 12:58 AM
ஈரோடு, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்ட செயலர் ஜான் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியது:
கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை பின்புறம் விளாங்கோம்பை பழங்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்துக்கு குண்டேரிப்பள்ளத்தில் இருந்து, 10 கி.மீ., விலங்குகள் நடமாடும் அடர்ந்த வனப்பகுதி பாதையில், நான்கு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும். கிராமங்களில் ஊராளி பழங்குடி இனத்தை சேர்ந்த, 40 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் பள்ளி செல்லும் குழந்தைகள், 30 பேர் உள்ளனர். இதேபாதையில், 4 கி.மீ., துாரத்தில் கம்பனுார் பழங்குடி கிராமத்தில், 10 குழந்தைகள் பள்ளி சென்று வருகின்றனர்.
கடந்த, 2010 ல் வனத்துறை மூலம் காட்டாறுகளை கடந்து செல்ல தரைப்பாலங்கள் கட்டி, 10 கி.மீ., துாரம் தார்ச்சாலை அமைத்தனர். சில ஆண்டில் பெரு வெள்ளத்தில் தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டு, சாலையும் பழுதானது. சாலையை செப்பனிட கோரி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் போராடி வருகிறது. இங்குள்ள, 40 குழந்தைகள் பள்ளி செல்ல அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தனியார் வாகனம் (டெம்போ) ஏற்பாடு செய்து வினோபா நகர், கொங்கர்பாளையம் பள்ளிகளுக்கு சென்று பயின்று வந்தனர். சமீபத்தில் கனமழையில் நான்கு தரைப்பாலங்களும் முற்றிலும் அழிந்து, கிராமத்துக்குள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டு, ஒரு மாதமாக குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது.
தரைப்பாலங்களை சீரமைப்பது உடனடி சாத்தியமில்லை. காட்டாறுகளை கடக்காமல், 4 கி.மீ., தொலைவில் மக்கள் பயன்படுத்தி வரும் மாற்றுப்பாதையான நடைபாதையை சீரமைத்து, வாகனங்கள் செல்லும்படி போர்க்கால அடிப்படையில் மாற்றித்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.

