/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் படிக்கட்டு பயணம் முதியவர் விழுந்து பலி
/
பஸ் படிக்கட்டு பயணம் முதியவர் விழுந்து பலி
ADDED : நவ 05, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பெருந்துறையில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் மாலை, அரசு டவுன் பஸ் (எண்.12) சென்றது. கதிரம்பட்டியை சேர்ந்த தொழிலாளி நடராஜ், 65, படிக்கட்டில் நின்றபடி பயணித்தார்.
வண்ணங்காட்டு வலசு பகுதியை கடந்தபோது படிக்கட்டில் இருந்து விழுந்தார். இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். ஈரோடு தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருந்துறை கிளையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் முருகன், 53, மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

