ADDED : டிச 30, 2025 01:33 AM
ஈரோடு: தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலர் ஆனந்தன் தலைமையிலான கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் கந்தசாமி-யிடம் மனு வழங்கி கூறியதாவது: கோபி தாலுகா, வலையபா-ளையம், எரங்காட்டூர், வரப்பள்ளம், பெருமுகை, நஞ்சகவுண்-டன்பாளையம் பகுதியில், 800க்கும் மேற்பட்ட அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள் வசிக்கிறோம். கூலி தொழிலாளர்களாக உள்ளதால், அப்பகுதி அரசு புறம்போக்கு இடங்களில் தனித்தனி-யாக வீட்டுமனை வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
* சத்தியமங்கலம் தாலுகா குத்தியாலத்துார் அருகே கான-கத்துார், கரளயம், சோளத்துார், பிள்ளையார் பிரிவு பகுதியில் வசிக்கும் பழங்குடி ஊராளி சமூகத்தினர் வழங்கிய மனுவில் கூறி-யதாவது: எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு, 2024 ஆக.,2 ல் துணை முதல்வர் உதயநிதி மூலம், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இடத்தை காண்பித்து, அளவீடு செய்து தரா-ததால் பயன்படுத்த முடியவில்லை. அளவீடு செய்து இடத்தை பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.

