/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனி மார்க்கெட்டில் நுழைவு நடைபாதை பணியை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

ADDED : அக் 03, 2025 01:24 AM
ஈரோடு ஈரோடு ப.செ.பூங்கா பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மூன்று மாடிகள் கொண்ட கனி ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 340க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பொங்கல், தீபாவளி, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் துணி எடுக்க, அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். வணிக வளாகத்தில் கிழக்கில் ஒரு நுழைவு நடைபாதையும், தெற்கில் ஒரு சிறிய அளவிலான நுழைவு நடைபாதையும் உள்ளன. பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் நெரிசலில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது.
எனவே கூடுதலாக இரண்டு நுழைவு நடைபாதை அமைக்க, மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வணிக வளாகத்தின் மேற்கில் இரண்டு நுழைவு நடைபாதை அமைப்பதற்கான கட்டுமான பணி சில தினங்களாக நடக்கிறது. ஆனால் மிக மெதுவாகவே உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, ஜவுளி வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.