ADDED : செப் 06, 2024 07:37 AM
காங்கேயம்: காங்கேயத்தில், 50க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும், பேக்கரி கடைகள் உள்ளன. மேலும், 500க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் செயல்படுகின்றன. இதில் பெரும்பாலான கடைகளில் அரசு விதிமீறி சிகப்பு, பச்சை உள்ளிட்ட பல அடர் வண்ண நிறங்களில் இனிப்பு தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
காங்கேயம் துர்க்கை அம்மன் கோவில் வீதியில் ஒரு சுவீட்ஸ் கடையில், இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் கடையில், திருப்பூர் ரோட்டை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம், இனிப்பு மற்றும் முறுக்கு வாங்கியுள்ளார். முறுக்கின் தயாரிப்பு தேதி முடிந்து ஒரு மாதமானது தெரிந்தது. இதுகுறித்து அவர் கேட்டபோது, கடை ஊழியர்கள் மாற்றி தர மறுத்துள்ளனர். அந்த கடையில் பழைய ஆயில், மற்றும் காலாவதி தின்பண்டங்கள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், கடையில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.