/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நீட்டிப்பு
/
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நீட்டிப்பு
ADDED : டிச 15, 2024 01:12 AM
புன்செய் புளியம்பட்டி, டிச. 15-
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் நன்செய் பாசனத்துக்கு கடந்த ஆக., 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. டிச., 12 வரை தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தண்ணீர் திறப்பை நீட்டிக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தினர். இதன்படி மாவட்ட நிர்வாகம் தண்ணீர் திறப்பை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து மேலும், 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரும், 27ம் தேதி வரை கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
நேற்று மாலை முதல், 700 கன அடி தண்ணீர் முதற்கட்டமாக திறக்கப்பட்டது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2,300 கன அடி வரை வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 99.49 அடி, நீர் இருப்பு, 28.3 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு, 1,018 கன அடி நீர் வரத்தானது.