/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெறும் வசதி
/
டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெறும் வசதி
டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெறும் வசதி
டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெறும் வசதி
ADDED : அக் 10, 2024 01:42 AM
டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம்
இடுபொருட்கள் பெறும் வசதி
ஈரோடு, அக். 10-
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம், வேளாண் இடுபொருட்களை பெறும் வசதி செயல்படுத்தப்படுகிறது.
இதுபற்றி, ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான விதை, நெல், உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை, உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், ஜிங்க் சல்பேட், டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ், மெட்டா ரைசிம் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.முன்பு, விவசாயிகள் வாங்கும் இடுபொருட்களுக்கு ரொக்கப்பணம் செலுத்தும் முறை இருந்தது. தற்போது டிஜிட்டல் முறையில் ஏ.டி.எம்., கார்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங், கூகுள் பே, போன் பே, பேடிஎம்., போன்ற மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்களுக்கு பணம் செலுத்தலாம். இதற்கான வசதிகள், ஈரோடு, சென்னிமலை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

