/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
40 ஆண்டாக வைத்தியம் போலி மருத்துவர் கைது
/
40 ஆண்டாக வைத்தியம் போலி மருத்துவர் கைது
ADDED : நவ 25, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில் அருகே தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து, 75; கடந்த, 40 ஆண்டுகளாக ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தார். மக்களுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரை வழங்கி வந்தார்.
இதையறிந்த திருப்பூர் இணை இயக்குனர் சுகாதர பணிகள் மீரா, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர், வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் சுகாதார ஆய்வாளர் கதிரவன், அவரது கிளீனிக்கில் சோதனை செய்தனர். இதில் முறையான மருத்துவம் படிக்காமல், வைத்தியம் பார்த்தது தெரிய வந்தது. புகாரின்படி காங்கேயம் போலீசார் செல்லமுத்துவை கைது செய்தனர். அவரது கிளீனிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது.

