/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மயக்க மாத்திரை தந்து பணம் பறிப்பு போலி பெண் டாக்டர் சிறையிலடைப்பு
/
மயக்க மாத்திரை தந்து பணம் பறிப்பு போலி பெண் டாக்டர் சிறையிலடைப்பு
மயக்க மாத்திரை தந்து பணம் பறிப்பு போலி பெண் டாக்டர் சிறையிலடைப்பு
மயக்க மாத்திரை தந்து பணம் பறிப்பு போலி பெண் டாக்டர் சிறையிலடைப்பு
ADDED : நவ 22, 2025 01:47 AM
அந்தியூர், நஅந்தியூரை அடுத்த கொல்லபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், 41; பட்டதாரி வாலிபர். ஐ.டி., ஊழியர். தற்போது வீட்டில் இருந்து பணிபுரிகிறார். திருமணமாகி எட்டு ஆண்டாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரியங்கா என்கிற இளவரசி, 40; திருவண்ணாமலை வ.உ.சி., நகரை சேர்ந்த செல்வன் என்கிற செல்வதுரை, 33; ஆகியோர், குழந்தை பேறுக்கு சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி, கடந்த, 16ம் தேதி இவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.
பிரியங்கா தன்னை சித்தா டாக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்துள்ளார். உயிரணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி, சுரேஷுக்கு மாத்திரை கொடுத்து சாப்பிட கூறியுள்ளார்.
மாத்திரையை விழுங்கிய சில நிமிடங்களில், அரைகுறை மயக்க நிலைக்கு சென்றார். அப்போது அவரது பாக்கெட்டில் வைத்திருந்த, 25 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து பணத்தை பறிகொடுத்ததை அறிந்த சுரேஷ், அவர்களை தேடி திருவண்ணாமலை சென்றார். எங்கு தேடியும் அவர்கள் கொடுத்த முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை
. இதுகுறித்து அந்தியூர் போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தார். மொபைல்போன் சிக்னலை கொண்டு போலீசார் தேடினர். இதில் பவானி பகுதியில் இருவரையும் நேற்று கைது செய்தனர். பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். சுசுகி செலோரியா காரை பறிமுதல் செய்தனர்.

