/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூங்காவை புதராக மாற்றும் மாடல் மாநகராட்சிக்கு கிடைக்குமா மெடல்?
/
பூங்காவை புதராக மாற்றும் மாடல் மாநகராட்சிக்கு கிடைக்குமா மெடல்?
பூங்காவை புதராக மாற்றும் மாடல் மாநகராட்சிக்கு கிடைக்குமா மெடல்?
பூங்காவை புதராக மாற்றும் மாடல் மாநகராட்சிக்கு கிடைக்குமா மெடல்?
ADDED : நவ 22, 2025 01:47 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, 17வது வார்டு எல்லப்பாளையம் அருகில், செங்குந்தர் நகர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவர்களின் பயன்பாட்டுக்காக, மத்திய அரசு திட்டத்தில், 90 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா கட்டினர். மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. சிறுவர்கள் விளையாடி மகிழ பல்வேறு விளையாட்டு உபகரணம் உள்ளது. பெரியவர்கள் நடைபயிற்சி செல்ல நடைபாதை, இருக்கை, கழிவறை வசதியும் உள்ளது.
பூங்காவுக்கு பொலிவு சேர்க்கும் வகையில் வாத்து, மயில் போன்ற பல்வேறு சிலைகளும் வைத்துள்ளனர். ஆனால் முறையாக துாய்மை பணி செய்யாததால், செடி, கொடி படர்ந்து அடர்வனமாகி விட்டது. இதுதான் சாக்கு என்று, மாநகராட்சி நிர்வாகமும் பூட்டு போட்டு, சாவியை பத்திரமாக வைத்துக் கொண்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பூங்கா பூட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதியில் கட்டியது என்பதால், மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லையோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து வார்டு கவுன்சிலர் முதல், மாநகராட்சி அதிகாரிகள் வரை, பலரிடமும் மனு கொடுத்தும் பலனில்லை.

