/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'குட்கா' விற்பனையில் ரூ.2.17 கோடி அபராதம்
/
'குட்கா' விற்பனையில் ரூ.2.17 கோடி அபராதம்
ADDED : நவ 22, 2025 01:46 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் போலீஸ், உணவு பாதுகாப்பு துறை, உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து, விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதித்து கடை மூடப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜன., முதல் இதுவரை புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, 807 கடைகள் மூடப்பட்டு, 2.17 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில், 4,452 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டுள்ளது. ஜீவானந்தம் வீதி, கொல்லம்பாளையத்தில் ஒரு மளிகை கடையில் தொடர்ந்து மூன்று முறை புகையிலை பொருட்கள் விற்றதால், உரிமம் ரத்து செய்யப்பட்டு, வணிக தடை செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. உள்ளாட்சி துறை வழங்கிய தொழில் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
புகையிலை, நிகோட்டின் கலந்த உணவு பொருள் விற்பனை குறித்த புகாரை, 0424-2223545, 94440-42322 என்ற எண்களில் தெரிவிக்கலாம். இத்தகவலை உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

