/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் 'டிராபிக் ஜாம்'
/
மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் 'டிராபிக் ஜாம்'
மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் 'டிராபிக் ஜாம்'
மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் 'டிராபிக் ஜாம்'
ADDED : நவ 25, 2024 02:20 AM
சத்தியமங்கலம்,: சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், நாள்தோறும் ஆயிரக்க-ணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆசனுார், காரப்பள்ளம் சோதனை சாவடி அருகில் சாலையோர மூங்கில் மரங்கள், நேற்று காலை முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதித்தது. 2 கி.மீ., துாரம் வாக-னங்கள் அணிவகுத்து நின்றன. ஆசனுார் வனத்துறையினர், தீய-ணைப்பு துறையினர், 3 மணி நேரத்துக்கும் மேலாக மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 மணிவரை போக்குவரத்து கடுமை-யாக பாதித்தது.
திம்பம் முதல் தமிழக எல்லை வரை சாலையோரம் மூங்கில் மரம் டன் கணக்கில் காய்ந்து கிடக்கிறது. வனத்துறையினரும் அகற்ற மறுப்பதால் அவ்வப்போது சாலையின் குறுக்கே முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பதாக, வாகன ஓட்டிகள் தெரிவித்-தனர்.