/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்சாரம் பாய்ச்சி மக்னா யானையை கொன்ற விவசாயி கைது; ஒருவர் ஓட்டம்
/
மின்சாரம் பாய்ச்சி மக்னா யானையை கொன்ற விவசாயி கைது; ஒருவர் ஓட்டம்
மின்சாரம் பாய்ச்சி மக்னா யானையை கொன்ற விவசாயி கைது; ஒருவர் ஓட்டம்
மின்சாரம் பாய்ச்சி மக்னா யானையை கொன்ற விவசாயி கைது; ஒருவர் ஓட்டம்
ADDED : நவ 04, 2024 04:55 AM
டி.என்.பாளையம்: டி.என் பாளையம் அருகே கடந்த மாதம், 16ம் தேதி இரவு, மின்-சாரம் தாக்கி மக்னா யானை இறந்து கிடந்தது. டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணையில், பங்களாபுதுார், அண்ணா நகரை சேர்ந்த உறவினர்களான சசிகுமார், 45, பெரியசாமி, 56, ஆகியோர், கம்பி வேலியில் மின்சாரம் பாய்ச்சி, திட்டமிட்டு கொலை செய்ததகு தெரிய வந்தது.
இதில் சசிகுமாரை கைது செய்த வனத்துறையினர், பெரியசாமியை தேடி வருகின்றனர்.இது-குறித்து வனத்துறையினர் கூறியதாவது: சசிகுமார், பெரியசாமி ஆகியோரின் தோட்டத்தில் பயிர்களை, மக்னா யானை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் யானை வரும் வழித்தடத்தில் கம்பிகள் கட்டி, அதில் மின்சாரம் பாய்ச்சியுள்-ளனர். அவர்கள் எண்ணப்படியே வந்த யானை, கம்பியை பிடித்-ததில் மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டது. இவ்வாறு கூறினர். வனச்சரகர் ஜான்பீட்டர் தலைமையிலான வனத்துறையினர், சசிகு-மாரை கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.