ADDED : ஜூன் 06, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
அருகேயுள்ள காசிகாட்டை சேர்ந்தவர் சென்னையன், 72; விவசாயியான இவர்
அதே பகுதியில் மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை
பயிரிட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை தோட்டத்துக்கு தண்ணீர்
பாய்ச்ச சென்றவர் வீடு திரும்பவில்லை.
சென்னையனின் மனைவி
தேடியபோது கிணற்றின் அருகில் அவரது செருப்பு கிடந்தது. கிணற்றில் தவறி
விழுந்திருக்கலாம் என சந்தேகித்து, சத்தி தீயணைப்பு
துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் கிணற்றில்
இறங்கி தேடியபோது சென்னையன் சடலமாக மீட்கபட்டார். சத்தி போலீசார்
விசாரிக்கின்றனர்.
