ADDED : ஜூன் 06, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
கங்காபுரம், சேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம், 30;
சி.என்.சி., மெஷின் ஆப்பரேட்டர். ஈரோட்டை சேர்ந்த, 14 வயது சிறுமிக்கு
பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார்,
போக்சோ சட்டத்தில் ஜீவானந்தத்தை கைது செய்து, மாவட்ட சிறையில்
அடைத்தனர்.
இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில், ஓராண்டு சிறையில் அடைக்க
எஸ்.பி., கிரண் ஸ்ருதி பரிந்துரைத்தார். இதை கலெக்டர் கந்தசாமி ஏற்றுக்
கொண்டதால், குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார்.
