/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்ட விரோத மின் வேலி விவசாயிக்கு அபராதம்
/
சட்ட விரோத மின் வேலி விவசாயிக்கு அபராதம்
ADDED : ஜூலை 28, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அத்தாணி அருகே சட்டவிரோத மின்வேலி அமைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.
அந்தியூர் வனச்சரகம், அத்தாணி பெருமாபாளையம், மூலப்பாரை தோட்ட பகுதியில், விவசாயி ஒருவர் தோட்டத்துக்கு மின்வேலி அமைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தியூர் வனத்துறையினர் நேற்று சோதனை செய்தனர். இதில் விவசாயி தேவராஜ், 57, கரும்பு காட்டை சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. மின்வேலியை அகற்றி, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, அவரை கைது செய்தனர். அவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.