/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி
ADDED : டிச 28, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: ஈரோடு அடுத்த, நசியனுார் அருகிலுள்ள முள்ளம்பாட்டி, மலைபாளையத்தை சேர்ந்தவர் ராசப்பன், 62, விவசாயி. இவர், நேற்று பிற்பகலில் ஸ்பிளண்டர் பைக்கில் பெருந்துறை நோக்கி சென்றார்.
தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை அடுத்த ஏரிக்-காட்டு பிரிவு அருகில் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ராசப்பனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.