/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாளவாடி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு
/
தாளவாடி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு
தாளவாடி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு
தாளவாடி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு
ADDED : நவ 06, 2024 01:10 AM
தாளவாடி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு
தாளவாடி, நவ. 6-
தாளவாடி மலையில் வனத்தை ஒட்டியுள்ள தலமலை, கோடிபுரம், சிக்கள்ளி, இக்கலுார், நெய்தாளபுரம், கெட்டவாடி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில், விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாளவாடி தாலுகா அலுவலகத்தை, விவசாய சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில், நேற்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். ஆயிரக்கணக்கானோர் வந்ததால், தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் மனு அளித்தனர். மனு விபரம்:
தாளவாடி தாலுகா வனப்பகுதியை ஒட்டிய எல்லை முழுவதும், போர்க்கால அடிப்படையில், பழைய ரயில்வே தண்டவாளத்தில், வேலி அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். குறிப்பாக தாளவாடி--ராமபுரம் பகுதியை ஒட்டிய கர்நாடக வனப்பகுதி ரயில்வே தண்டவாளத்தில் வேலி அமைக்கும் பணியை, கர்நாடக வனத்துறை மேற்கொள்ள வேண்டும்.
வனப்பகுதி வழியாக செல்லும் பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு, உடனடியாக கேபிள் மூலம் மின்சாரத்தை கடத்தும் வகையில் பணி மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை, 24 மணி நேரமும் திம்பம் மலைப்பாதையில் கொண்டு செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும். வனப்பகுதிக்குள் உள்ள அனைத்து பாரம்பரிய கோவில்களுக்கும் செல்ல, வனத்துறை இடையூறு செய்யக்கூடாது.
திகினாரையில் உள்ள ஜோரைகாடு பகுதியை, மாதிரி வேளாண் பகுதியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். யானை தாக்கி உயிரிழக்கும் விவசாயிகளுக்கு, காலம் தாழ்த்தாமல் அரசு தரப்பில் நஷ்டஈடு வழங்க வேண்டும். பழங்குடி மக்கள் வனப்பகுதிக்குள் சென்று சேகரித்து வந்த அனைத்து பொருட்களையும் தொடர்ந்து சேகரிப்பதற்கு வனத்துறை இடையூறு செய்யக்கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

