/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிப்காட் அமைக்க எதிர்ப்பு பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
/
சிப்காட் அமைக்க எதிர்ப்பு பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
சிப்காட் அமைக்க எதிர்ப்பு பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
சிப்காட் அமைக்க எதிர்ப்பு பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
ADDED : ஆக 23, 2025 01:39 AM
தாராபுரம், சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரத்தை அடுத்த கொளத்துபாளையத்தில், கூட்டுறவு நுாற்பாலை நிலத்தில் சிப்காட் நிறுவனம் கையகப்படுத்தி, தொழில் நிறுவனம் அமைக்க முயற்சி எடுத்தது. இதனால் அமராவதி பாசன விவசாயிகள் பாதிப்படைவர். விதை நெல்லும் தரம் கெடும் எனக்கூறி, அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமையில், பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட த.மா.கா., தலைவர் காளிதாஸ், பா.ஜ., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அ.தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சிப்காட் திட்டத்தை ரத்து செய்வதாக பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர். இதுதொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலாவிடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பேசினர். இம்மாத இறுதி வரை காத்திருக்குமாறு அவர் தெரிவித்தார்.
போராட்டம் நீடிக்கும்
கூட்டத்தில் பேசிய பிரதிநிதி
கள், தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் பற்றி பேசி முடிவு செய்யப்படும் என கூறினர். தமிழக விவசாயி
கள் பாதுகாப்பு சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட, 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.