ADDED : நவ 29, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயிகள் தொடர் போராட்டம்
காங்கேயம், நவ. 29-
கோவை அருகே இருகூர் முதல் திருப்பூர் மாவட்டம் முத்துார் வரை நிறைவேற்றப்படும், எண்ணெய் குழாய் திட்டத்தை, சாலையோரம் அமைக்க கோரி, காங்கேய கிராமத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், அகஸ்திலிங்கம்பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை நேற்றும் தொடர்ந்தனர்.
எண்ணெய் குழாய்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு கடந்த, 25 ஆண்டுகளாக இழப்பீடு அல்லது ஒப்பந்த தொகை வழங்கவில்லை. இதனால் விவசாயிகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் குழாயை சாலையோரம் அமைக்க வேண்டும் என்றனர்.