sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : மே 18, 2025 05:56 AM

Google News

ADDED : மே 18, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: குளங்கள் முழுக்க அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அரசால் அனைத்து குளங்களையும் பராமரிக்க முடிவதில்லை. நாள-டைவில் குளங்களுக்கும் விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனால், பல குளங்கள் போதிய பரா-மரிப்பின்றி, முட்புதர் மூடி கிடக்கிறது. காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இன்று குப்பை மேடாக மாறி வருகிறது.

வண்டல் மண்ணே இல்லாத குளங்களில் கூட வண்டல் மண் எடுப்பதாக கூறி, கிராவல் மண் எடுத்து விற்பனை செய்யப்படுகி-றது. பல குளங்களில் பாதாளம் வரை மண் அள்ளப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் பணத்-திற்கு விலை போய் விடுகின்றனர். எனவே, வருவாய் துறையை கொண்டு அரசு மேற்பார்வை செய்யலாம். முழுக்க முழுக்க உள்ளூர் விவசாயிகள் அடங்கிய பாசன சபைகளை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அங்கு முறைகே-டாக மண் அள்ளுவதற்கும், குப்பைகளைக் கொட்டுவதற்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இது நமது குளம் என்ற அக்கறை விவசாயிகளுக்கு இருக்கும். குளங்களை பாதுகாப்பது மட்டுமின்றி, பராமரிப்பது, மரக்கன்று நடுவது, துார் வாருவது உள்ளிட்ட பணிகளையும் எளி-தாக செய்ய முடியும்.






      Dinamalar
      Follow us