/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முதல்வருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
/
பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முதல்வருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முதல்வருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முதல்வருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ADDED : மே 15, 2025 01:49 AM
ஈரோடு:பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, தமிழக முதல்வர், நீர்வளத்துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி அனுப்பிய மனுவில் கூறியுள்ளார். மேலும் அதில் கூறியிருப்பதாவது:
கேரளாவில் சராசரி மழைப்பொழிவு, 3,000 மி.மீ., தமிழகத்தில் சராசரி மழையளவு, 920 மி.மீ., நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறு பாண்டியாறு. இதன் நீர் பிடிப்பு பகுதி
யான தேவாரா காடுகளில், 6,000 மி.மீ., அளவுக்கு ஆண்டு சராசரி மழையாக பதிவாகிறது. சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக இங்குதான் அதிகம் மழை பெய்கிறது. இது மேற்கு நோக்கி ஓடி, புன்னம்புழா என பெயர் பெற்று, கேரளா சாளியாற்றில் கலந்து, கள்ளிக்கோடு அருகே பயன்பாடு இன்றி அரபிக்கடலில் கலக்கிறது.
தமிழக - கேரளா எல்லையில் தடுப்பணை கட்டி, கிழக்கு நோக்கி திருப்பினால் தமிழகத்துக்கு, 14 டி.எம்.சி., வரை தண்ணீர் கிடைக்கும். மேலும் தண்ணீரை திருப்பினால் எளிதாக அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு உரிமை நீர் கிடைக்கும். கோவை, திருப்பூர் குடிநீர் திட்டங்களுக்கு கூடுதலாக தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
திருப்பூர் சாயக்கழிவால் நொய்யலாற்று ஒரத்துப்பாளையம் அணையும், கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள, 19,500 ஏக்கர் விளை நிலமும் பயனற்று போனது. பாண்டியாறு - புன்னம்புழா நீரை பவானிசாகர் அணையில் இருந்து, 124 மைல் நீளம் கொண்ட கீழ்பவானி பாசன தலைமை கால்வாய் வழியாக, அரவக்குறிச்சி, அத்தப்பாளையம் அணை தேக்கத்துக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு நில எடுப்பு தேவையில்லை.
பாண்டியாறு - மோயாறு இணைப்பு, பவானி பாசனங்களுக்கு கூடுதலான வளம் சேர்க்கும். கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும், காவிரி டெல்டா பாசனங்களின் நீர் பற்றாக்குறையை நிரப்பும். எனவே, இதுபற்றி தமிழக அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.