/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காற்றில் பறந்த வாக்குறுதியால் உழவர்சந்தை விவசாயிகள் 'பகீர்'
/
காற்றில் பறந்த வாக்குறுதியால் உழவர்சந்தை விவசாயிகள் 'பகீர்'
காற்றில் பறந்த வாக்குறுதியால் உழவர்சந்தை விவசாயிகள் 'பகீர்'
காற்றில் பறந்த வாக்குறுதியால் உழவர்சந்தை விவசாயிகள் 'பகீர்'
ADDED : மே 11, 2025 01:35 AM
தாராபுரம், காற்றில் பறந்த வாக்குறுதியால் உழவர்சந்தை விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தாராபுரம் உழவர் சந்தைக்கு வெளியே, சாலையோரத்தில் காய்கறி கடை போடுவதால், தங்கள் வியாபாரம் பாதிப்பதாக, உழவர் சந்தை விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடவடிக்கை கோரி, உழவர் சந்தையில் விவசாயிகள் நேற்று முன்தினம் போராட்டம் செய்தனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் அதிகாரிகள், காலை, 9:00 மணி வரை சாலையோர வியாபாரத்தை அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தனர்.
ஆனால் நேற்று வழக்கம்போல் சாலையோர கடைகள், அதிகாலையிலேயே வியாபாரத்தை தொடங்கினர். நகராட்சி ஊழியர்கள் கடைகளை அப்புறப்படுத்துமாறு கூறினர். இதனால் வியாபாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் சமரசம் செய்தனர். அதேசமயம் உழவர் சந்தை விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்த தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் போலீசார், வியாபாரிகளை கட்டுப்படுத்தும் முயற்சியை கைவிட்டனர். சாலையோர வியாபாரிகள் வழக்கம்போல் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்தனர். இதனால் உழவர்சந்தை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.