/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆறு கரையோர சாய ஆலை அனுமதி ரத்து எம்.எல்.ஏ.,வை சந்தித்து நன்றி கூறிய விவசாயிகள்
/
பவானி ஆறு கரையோர சாய ஆலை அனுமதி ரத்து எம்.எல்.ஏ.,வை சந்தித்து நன்றி கூறிய விவசாயிகள்
பவானி ஆறு கரையோர சாய ஆலை அனுமதி ரத்து எம்.எல்.ஏ.,வை சந்தித்து நன்றி கூறிய விவசாயிகள்
பவானி ஆறு கரையோர சாய ஆலை அனுமதி ரத்து எம்.எல்.ஏ.,வை சந்தித்து நன்றி கூறிய விவசாயிகள்
ADDED : ஜூன் 27, 2025 01:01 AM
கோபி, ''பவானி ஆறு கரையோரத்தில், சாய ஆலைக்கு அனுமதி வழங்கியிருந்தனர். விவசாயிகள் மற்றும் மக்களின், ஐந்தாண்டுகள் தொடர் போராட்ட முயற்சியால், அந்த சாய ஆலை இனி அங்கு நடத்த அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது,'' என, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி அருகே கரட்டூரில் உள்ள அ.தி.மு.க., கட்சி ஆபீசில், கொடிவேரி அணை---பவானி நதி பாசன விவசாயிகள் அடங்கிய குழுவினர், பவானி ஆறு பாதுகாப்பு குறித்து, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையனை நேற்று சந்தித்து பேசினர். அப்போது எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
பவானி ஆறு கரையோரத்தில், சாய ஆலைக்கு அனுமதி வழங்கியிருந்தனர். விவசாயிகள் மற்றும் மக்களின், ஐந்தாண்டுகள் தொடர் போராட்ட முயற்சியால், அந்த சாய ஆலை இனி அங்கு நடத்த அனுமதியில்லை என அதற்கான ஆணையும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரின் முயற்சியால் சாய ஆலை பிரச்னைக்கு முடிவு கிடைத்துள்ளது.
இன்று பெரும் நகரங்களில், கழிவுநீர் ஆற்றில் கலப்பதால், ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து, தண்ணீர் எங்கே உள்ளது என தேடிப்பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. அந்தளவுக்கு ஆறுகளில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன.
எனவே எதிர்காலத்தில், ஒவ்வொரு நகராட்சியிலும், கழிவுநீரை சுத்திகரித்து தான், அதன் நீரை வெளியேற்ற வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அதற்கான முயற்சியை நாங்கள் அனைவரும் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கொடிவேரி அணை-- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சுபிதளபதி நிருபர்களிடம் கூறியதாவது:
பவானி ஆற்றங்கரையில், கொடிவேரி அணை அருகே, 500 கோடி ரூபாய் செலவில், சாய சலவை ஆலை துவங்க ஒரு நிறுவனம் கடந்த ஐந்தாண்டுகளாக முயற்சித்தது. அதுகுறித்து பாசன விவசாயிகள், கோபி எம்.எல்.ஏ.,வை அணுகி, அந்த ஆலை ஆலை இயங்குவதை தடுக்க கோரிக்கை முன்வைத்தோம். அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனுவும் வழங்கி, போராட்டங்களிலும் ஈடுபட்டோம். அதேசமயம் கோபி எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின்படி, தமிழக முதல்வர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரை சந்தித்து, அதுகுறித்து வலியுறுத்தினோம்.
அதனால் அமைத்த குழுவின் அறிக்கையின் படி, கடந்த ஜூன் 10ல், தமிழக சுற்றுச்சூழல் துறையின் முதன்மை செயலாளர், சாய ஆலைக்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை பெற்றுத்தந்த எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி தெரிவித்தோம். இவ்வாறு கூறினார்.