/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குளக்கரையில் பொக்லைனில் நடக்கும் சீரமைப்பு பணி; விவசாயிகள் அதிருப்தி

ADDED : டிச 02, 2024 03:05 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள, 451 ஏக்கர் பரப்பு கொண்ட காவிலி
பாளையம் குளம் தற்போது நிரம்பி உள்ளது. நேற்று முன்தினம் குப்பந்துறை அருகே குளத்தின் வடக்கு மண் கரையில் பிளவு ஏற்-பட்டது. அந்த இடத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்-கொண்டனர். 20 அடி நீளத்துக்கு பிளவு ஏற்பட்டதாலும், பரவ-லாக மழை பெய்து வருவதாலும், கரையில் உடைப்பு ஏற்படும் முன் கரையை விரைந்து சீரமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பிளவு ஏற்பட்டுள்ள இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம், நீர்வளத்துறை அதிகாரிகள் பணி மேற்கொண்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தண்-ணீரின் அழுத்தம் தாங்காமல் பிளவு ஏற்பட்டுள்ள இடத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் நிரப்பும் பணி நடக்கிறது. ஆனால், பொக்லைன் இயந்திரத்தின் எடை தாங்காமல் கரை மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. பணியாளர்கள் மூலம் சீர-மைப்பு பணி செய்ய வேண்டும். மேலும் விரைந்து மணல் மூட்டை அடுக்கி கரையை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.