/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாளவாடியில் விவசாய சங்க தலைவர் கைது
/
தாளவாடியில் விவசாய சங்க தலைவர் கைது
ADDED : அக் 31, 2024 06:23 AM
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே, வனத்துறை அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, விவசாய சங்க தலைவர் கைது செய்யப்பட்டார்.
தாளவாடி அருகே, ஜீரகள்ளி ரேஞ்சர் சக்திவேல், தாளவாடி போலீசில் புகாரளித்தார். அதில், கடந்த 20ம் தேதி சிமிட்டஹள்ளியில் ரங்கசாமி கோவில் பகுதியில், காட்டுப்பன்றிகளை வலை வைத்து பிடித்து வருவதாக தகவல் கிடைத்து சென்றோம். அப்போது, வனத்துறையி-னரை
கண்டதும் அங்கிருந்த ஐந்து பேர் தப்பினர். மைசூரை சேர்ந்த மனோஜ் என்பவர் மட்டும் சிக்-கினார். அவரிடமிருந்து இரண்டு காட்டுப்பன்-றிகள், வலைகளை பறிமுதல் செய்து விசார-ணைக்காக அழைத்து சென்ற போது, விவசா-யிகள் சங்க தலைவர் ரவிக்குமார், மகேந்திரன், சேகர் மற்றும் பொதுமக்கள் என, 60 பேர் ஜீப்பை வழி மறித்து தகாத வார்த்தை பேசி, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தனர். பிடித்து வைத்திருந்த மனோஜை தப்பிக்க வைத்துள்-ளனர். அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தும், பொதுமக்களை துாண்டி விட்டனர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தாள-வாடி போலீசார் நேற்று விவசாய சங்க தலைவர் ரவிக்குமாரை கைது செய்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,' காட்-டுப்பன்றிகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்-களை சேதப்படுத்துகிறது. இது குறித்து பல-முறை மனுக்களை, வனத்துறையினரிடம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நவ, 5.,ம் தேதி தாசில்தாரிடம் மனு கொடுக்க முடிவு செய்தோம். இதையறிந்த வனத்துறையினர், வேண்டு-மென்றே பொய் புகாரை கொடுத்து விவசாய சங்க தலைவரை கைது செய்துள்ளனர்,'' என்றார்.