நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஐக்கிய விவசாயிகள் முன்னணி, ஈரோடு மாவட்டம் சார்பில், பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபியில் நேற்று டிராக்டர் மற்றும் வாகன பேரணி சென்றனர்
. மாவட்ட ஒருங்கிணைப்-பாளர் முனுசாமி தலைமை வகித்தார். தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் பேசினார். கார்ப்ரேட்டுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். வேளாண் விளைபொருட்க-ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேரணி சென்றனர்.