/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாசிச கழகங்களை அழிக்க வேண்டும்: ஹெச்.ராஜா காட்டம்
/
பாசிச கழகங்களை அழிக்க வேண்டும்: ஹெச்.ராஜா காட்டம்
ADDED : மார் 17, 2024 02:35 PM
ஈரோடு: ''பாசிச கழகங்களையும், கம்யூனிஸ்ட்களையும் தமிழகத்தில் இருந்து அடியோடு அழிக்க வேண்டும்,'' என்று, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார்.டாக்டர்கள் சங்கம், அனைத்து வணிக, தொழில் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று ஈரோட்டில் நேற்று நடந்தது. பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் தமிழக மக்கள் முன், பிரச்னை வளர்ச்சி அரசியலா?. வாரிசு அரசியலா?. தி.மு.க.,வில் கருணாநிதிக்கு மகனாக பிறந்ததை தவிர முதல்வருக்கு வேறு தகுதி இருக்கிறதா? பிரதமர் வருகை குறித்து முதல்வர் பேசியிருப்பது அதிர்ச்சியாக, ஆச்சரியமாக உள்ளது. பிரதமர் மூன்றாண்டுகளில் பல முறை தமிழகம் வந்துள்ளார். அப்போது தேர்தலா இருந்தது?.
அடுத்த தலைமுறையை அழிக்கும் நோக்கில் தமிழகம் செல்கிறது. கடந்த, 1970ல் கள்ளுகடையை திறந்து குடிகெடுத்த குடும்பம் கருணாநிதி குடும்பம். தமிழகம் போதை பொருட்களின் உறைவிடமாக மாறி உள்ளது. ஜாபர் சாதிக்கை, தி.மு.க.,வின் மாவட்ட அயலக இணை செயலாளராககியது யார்? கடந்த, 2006, 2019ல் போதை பொருள் வைத்திருந்தது, கடத்தி சிறையில் இருந்தது முதல்வருக்கு தெரியாதா.
ஜாபர் சாதிக், ஜாபர் சேட் ஆகியோர் தான் தி.மு.க., என்னும் பிண பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி. இவ்விவகாரத்தில் தி.மு.க.வுக்கு தொடர் உள்ளதா, இல்லையா. இது தமிழக டி.ஜி.பி.,க்கு தெரியாதா. பிரிவினைவாத, தேச விரோத, பாசிச கும்பல் கழகங்களும், கம்யூனிஸ்ட்களும் தான். தமிழகத்தில் இந்த பாசிச கழகங்களை அடியோடு அழிக்க வேண்டும்.
தேர்தல் பத்திரம் வெளிப்படையாக வாங்கப்பட்டது. 39 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும், தி.மு.க.,வுக்கு, 690 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் எவ்வாறு வந்தது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி., கார்வேந்தன், ஈரோடு மாவட்ட பா.ஜ., தலைவர் வேதானந்தம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி பங்கேற்றனர்.

