/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பட்டா மாறுதல்களை விரைவாக வழங்கணும்'
/
'பட்டா மாறுதல்களை விரைவாக வழங்கணும்'
ADDED : நவ 10, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பட்டா மாறுதல்களை
விரைவாக வழங்கணும்'
ஈரோடு, நவ. 10-
நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் மதுசூதன ரெட்டி தலைமையில், நில அளவைத்துறை சார்பில், இணைய வழி பட்டா மாறுதல் மற்றும் நத்தம் நிலவரி திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.
இணைய வழி பட்டா மாறுதல் மனுக்களில் தள்ளுபடி சதவீதத்தை குறைக்க வேண்டும். நிலுவை இனங்களை குறைத்து, விரைவாக பட்டா வழங்க வேண்டும். 30 நாட்கள் மற்றும் அதற்கு மேல் நிலுவையில் உள்ள தகுதியான மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள யோசனை தெரிவித்தார். முன்னதாக பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.