தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சபரிமலைக்கு விரதம் தொடங்கிய பக்தர்கள்

சபரிமலைக்கு விரதம் தொடங்கிய பக்தர்கள்

சபரிமலைக்கு விரதம் தொடங்கிய பக்தர்கள்


ADDED : நவ 18, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:கார்த்திகை மாத பிறப்பான நேற்று, சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

ஈரோடு கருங்கல்பாளையம் ஐயப்பன் கோவிலில், ஐயப்பா சேவா நிறுவனம் சார்பில், மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாலை போட்டுக்கொள்ள, அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். கோவில் குருசாமி பக்தர்களுக்கு துளசி, சந்தன மாலை அணிவித்தார். ரயில்வே காலனி சித்தி விநாயகர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

* புன்செய்புளியம்பட்டி நேருநகரில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் கார்த்திகை முதல் நாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. தர்மசாஸ்தா ஐயப்பன் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். சபரிமலை செல்லும் பக்தர்கள் குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us