ADDED : ஜூன் 17, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த வடிவேல் மகள் மதுமிதா, 17; கடந்த, 10ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
* ஈரோடு, கொல்லம்பாளையம், திரு.வி.க., வீதியை சேர்ந்த விஜி மகள் ஹன்சிகா, 13; எட்டாம் வகுப்பு மாணவி. பள்ளிக்கு சரிவர செல்லாமல் தோழிகள் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவாராம். கடந்த, 9ம் தேதி வீடு வரவில்லை. தோழிகள் வீட்டுக்கு சென்றிருப்பார் என வீட்டார் நினைத்து விட்டனர். இன்று வரை வீடு திரும்பாததால் ஹன்சிகா தாய் ஜெயலட்சுமி அளித்த புகாரின்படி, சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.