/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருமகன் வாங்கிய கடனுக்கு மிரட்டல் மனைவியுடன் வந்து மாமனார் குமுறல்
/
மருமகன் வாங்கிய கடனுக்கு மிரட்டல் மனைவியுடன் வந்து மாமனார் குமுறல்
மருமகன் வாங்கிய கடனுக்கு மிரட்டல் மனைவியுடன் வந்து மாமனார் குமுறல்
மருமகன் வாங்கிய கடனுக்கு மிரட்டல் மனைவியுடன் வந்து மாமனார் குமுறல்
ADDED : செப் 09, 2025 01:49 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில், சிவகிரி, லால்பகதுார் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 55, அவரது மனைவியுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கூறியதாவது:
என்னுடைய இரண்டாவது மகளின் கணவர் சென்னியப்பன். தொழில் அபிவிருத்திக்கு பணம் வேண்டும் எனக்கூறி, எனது வீடு, நில பத்திரத்தை பெற்றார்
. அப்போது புரோக்கர்கள் சிலர், வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றனர். நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறினார். ஆனால், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கியதாகவும், கடனை அவர் கட்டாததால், அத்தொகையை வழங்கி பத்திரத்தை மீட்குமாறும் என்னை மிரட்டுகின்றனர். எனக்கு படிப்பறிவு இல்லாததால், எவ்வளவு தொகை கடன் பெற்றார்கள், நான் வெற்று பத்திரத்தில் கையெழுத்திட்டத்தில் என்ன எழுதினார்கள் என தெரியவில்லை. எனது பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.