/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 வயது மகனை கொன்று தந்தை துாக்கிட்டு தற்கொலை
/
5 வயது மகனை கொன்று தந்தை துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூன் 27, 2025 03:09 AM
பெருந்துறை:மனைவி பிரிந்து சென்றதால், 5 வயது மகனை கொன்ற தந்தை, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர், கெடாரை சேர்ந்தவர் வினோத், 30; லேத் பட்டறை தொழிலாளி. இவரது மனைவி பிரியா, 25. திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு, பிருத்திவி, 5, என்ற மகன் இருந்தார். இரு மாதங்களுக்கு முன் பெருந்துறை, குன்னத்துார் ரோடு, அய்யப்பன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் குடி வந்தனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி, இரு வாரங்களாக தான் வேலை செய்யும் இடத்திலேயே தங்கி விட்டார்.
விரக்தியடைந்த வினோத், மகனின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.