/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளை பலாத்காரம் செய்ய முயற்சி கொடூர தந்தைக்கு 5 ஆண்டு சிறை
/
மகளை பலாத்காரம் செய்ய முயற்சி கொடூர தந்தைக்கு 5 ஆண்டு சிறை
மகளை பலாத்காரம் செய்ய முயற்சி கொடூர தந்தைக்கு 5 ஆண்டு சிறை
மகளை பலாத்காரம் செய்ய முயற்சி கொடூர தந்தைக்கு 5 ஆண்டு சிறை
ADDED : நவ 18, 2025 01:47 AM
ஈரோடு, ஈரோட்டில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில், தந்தைக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு பெரிய சேமூர் பகுதியை சேர்ந்தவர், 42 வயது தறி பட்டறை தொழிலாளி. இவர் மனைவியும் தறி பட்டறை தொழிலாளி. தம்பதிக்கு ஒன்பது வயதில் மகள் உள்ளார். வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிறுமி படித்தார். பள்ளி விடுமுறைக்காக, 2019 மே 25ல் சிறுமி வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவரது தந்தை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், சிறுமி தப்பி ஓடி விட்டார். மீண்டும் ஒரு முறை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இது மனைவிக்கு தெரிய வந்ததால், போலீசில் புகாரளித்தால் வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி விடுவேன் என்று அவரையும் மிரட்டியுள்ளார். ஆனாலும் வீரப்பன்சத்திரம் போலீசில் அவர் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், போக்சோவில் முருகேசனை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வந்தார். இந்த வழக்கு விசாரணை, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில்
நடந்தது.
நீதிபதி சொர்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார். முருகேசனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

