ADDED : நவ 18, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த தம்பதிக்கு, 15 மற்றும் 11 வயதில் இரு மகள்கள் இருந்தனர். இதில் ஒருவர், 10ம் வகுப்பு படித்தார். மற்றொருவர் ஆறாம் வகுப்பு படிக்கிறார்.
இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள், படிப்பில் கவனம் செலுத்தாமல், மொபைல்போனில் மூழ்கியுள்ளார். இதை தாய் கண்டித்ததால் நேற்று காலை பூச்சி மருந்தை குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின்படி அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

