UPDATED : நவ 12, 2026 07:57 PM
ADDED : நவ 12, 2026 07:04 PM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடில் அப்துல் ரஹீம், 75, என்பவரை மது போதையில் அடித்து கொன்ற அவரது மகன் சபிக், 37, கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, புதுமை காலனியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். பூ வியாபாரி. இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். மூன்றாவது மகன் சபிக், டூ - வீலர் பட்டறையில் வேலை செய்தார்.
மனைவியை பிரிந்து தந்தை வீட்டில் வசித்த சபிக், மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு போதையில் தகராறு செய்த சபிக், தந்தையை தாக்கி, தலையை தரையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில், மயக்கமான அப்துல் ரஹீமை அப்பகுதியினர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். சூரம்பட்டி போலீசார், சபிக்கை கைது செய்தனர்.
